Friday, 2 June 2017

உடல் இளைக்க கிரீன் டீ

Leave a Comment


1.கிரீன் டீ  நம் உடலில் உள்ள கொழுப்பை எரிக்க செய்து நமது  வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.பசிஎடுக்கும் உணர்வு குறைக்கபடுவதால் குறைந்தளவே சாப்பிட முடியும் .ஆதலால் உடலில் தேவையற்ற ஆற்றல் சேர்வது  குறைக்கபடுகிறது. இயற்கையான வழியில் உடல் இளைக்க கிரீன் டீ உதவுகிறது .

2.நமது உடலில் இருக்கும் அதிகப்படியான நீர் நம் உடல் குண்டாக தோன்றுவதற்கு ஒரு காரணமாகும். அத்தகைய நீரினை கிரீன் டீ உடலிலிருந்து குறைப்பதால் மெலிதான தோற்றத்தை அடையலாம்.

3.கிரீன் டீ-யில் catechins என்ற வேதிப்பொருள் இருப்பதால் உடலை வெப்பப்படுத்தும் பணியை செய்கின்றன.இது உடலில் உள்ள  கொழுப்பை எரித்து ஆற்றலை கொடுக்கிறது .இதனால் கொழுப்பு இழக்கப்படுகிறது, உடல் எடை குறைக்கபடுகிறது .

4. உடலில் கார்போஹைட்ரேட்டை மெதுவாக செயல்பட  வைப்பதால் இரத்தத்தில் இன்சுலின் அளவு குறைக்கபடுகிறது . இதனால் குளுகோஸ் கொழுப்பாக மாறும் அளவும் குறைக்கபடுகிறது.உடல் எடையும் குறைக்கபடுகிறது .


கிரீன் டீ-யின்  பயன்கள் :
  • கேன்சர் உருவாவதை தடுக்கிறது.
  • சர்க்கரை நோயை கட்டுபடுத்துகிறது.
  • இருதய நோய்கள் வராமல் தடுக்கிறது.
  • ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கும், முகப்பரு மற்றும் சுருக்கங்களை தடுக்கிறது.
  • எடை இழப்பிற்கு உதவி செய்கிறது .
  • முதுமை அடைவதை தடுக்கிறது ,இளமையாக இருக்க உதவுகிறது.
  • சீரான செரிமானத்திற்கு உதவுகிறது .
  • குடல் சம்பந்தமான பிரச்சனைகளை நீக்குகிறது.
  • சிறுநீரகம் மற்றும் கல்லீரல் போன்றவற்றை பாதுகாக்கிறது .
  • எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது.
  • சுறுசுறுப்பாக இருக்கவும் உதவுகிறது.
Read More

உடல் எடை கூட

Leave a Comment

1. காலையில் கண்டிப்பாக  டிபன் சாப்பிடகூடாது .
2. வெறும் வயிற்றில் உடற்பயிற்சி செய்ய வேண்டும்
3. நன்கு சாப்பிட்ட பின் நன்றாக தூங்க வேண்டும் 
4. சாக்லேட் மற்றும் ஐஸ் கிரீம்  அதிகம் சாப்பிட வேண்டும்
5. இரவில் தாமதமாக சாப்பிட வேண்டும்
6. நொறுக்கு தீனிகள் அதிகம் சாப்பிட வேண்டும்
7.  கோழி இறைச்சி( தோலுடன்) சாப்பிட வேண்டும்
8. முட்டையின்  மஞ்சள் கருவை  தினமும் சாப்பிட வேண்டும்
9. முந்திரி,பாதாம்,பிஸ்தா போன்ற பருப்பு வகைகளை  சாப்பிட வேண்டும்
10. நடனம், நடை பயிற்சி, நீச்சல்   செய்ய கூடாது
11. வருத்த உணவுகளையே சாப்பிட வேண்டும்
12. வேர்கடலை அதிகமாக எடுத்துகொள்ள வேண்டும்
13. வெண்ணை , நெய் போன்ற பால் பொருட்களை உணவுகளில் சேர்த்துகொள்ளவும்
14. சமையலுக்கு கடலை எண்ணெய் பயன்படுத்தவேண்டும்
 15. கொழுப்பு இறைச்சியை சாப்பிட வேண்டும் 
 16.உருளை கிழங்கை அதிகம் சாப்பிட வேண்டும் 
 17.சந்தோஷமாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் .இது ஹார்மோன் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் .
        இவைகளை கடைபிடிப்பதின்  மூலம்  நான்கு வாரங்களில் உடல் எடை கூடும் 
Read More

உடல் எடையை குறைக்க

Leave a Comment

திரிபலா சூரணம் மிக உபயோகமாக இருக்கும், த்ரிபலா என்பது நெல்லிக்காய், கடுக்காய்,ஜாதிக்காய் மூன்றும் சரி விகிதத்தில் கலந்த கலவை தான்.
உணவு உட்கொள்ளும் முன் ஒரு மணி நேரம் முன் இந்த சூரணம் எடுத்து கொள்ள வேண்டும். ஒரு டம்ளர் வென்னீரில் ஒரு ஸ்புன் கலந்து குடிக்க வேண்டும்.
உடலில் உள்ள அதிகபடியான கொழுப்பு, கெட்ட நீர் இவைகள் இயற்கை கழிவுகளாக வெளி ஏறிவிடும், உடல் எடையும் கண்முன்னே குறைய தொடங்கும்.
ஒரு நாளுக்கு 4 வேளை கழிவு வெளியேறும், இதனால் பயம் கொள்ள வேண்டாம்,
Read More

Tuesday, 23 May 2017

உடல் சூட்டை குறைப்பது எப்படி

Leave a Comment

உடல் சூட்டை குறைப்பது எப்படி


உடல் உஷ்ணத்தை குறைக்க எளிய வழி !!

இன்றைய சூழ்நிலையில், இயற்கையில் ஏற்படும் பருவ மாற்றத்தால், நம்மில் பலருக்கு உடலில் அதிக வெப்பம் உண்டாகிறது. 

இந்த உடல் உஷ்ணம் அதிகரித்தல் முக்கியமாக அதிக நேரம் வெளியில் சுற்றுவதாலும், அதிக நேரம் நாற்காலி, சோபா மீது உட்கார்ந்திருப்பதாலும் ஏற்படுகிறது.

இதனால் நம் தலை முடி முதல் கால் வரை உள்ள அனைத்தும் ஆரோக்கியத்தை இழக்கிறது, இதனால் ஏற்படும் நோய்கள் முக்கியமாக முகப்பரு, தோல் வியாதிகள், தலை முடி உதிர்தல், வாயிற்று வலி, உடல் எடை குறைதல் போன்ற எரிச்சலூட்டும் நிகழ்வுகள் நிகழ்கிறது.

இதனை சரி செய்ய நம் சித்தர்கள் அன்றைய காலகட்டத்திலேயே ஒரு எளிய மற்றும் ரகசியமான வழியை கண்டறிந்துள்ளனர். 

அந்த எளிய மருத்துவ முறை உங்களுக்காக இதோ, 

தேவையான பொருள்கள் :

1.நல்லெண்ணெய் 

2.பூண்டு

3.மிளகு

செய்முறை:
நல்லெண்ணையை ஒரு குழி கரண்டியில் தேவையான அளவு எடுத்து கொண்டு அதனை மிதமான சூட்டில் சூடு படுத்தவும். எண்ணெய் காய்ந்ததும் அதில் மிளகு மற்றும் தோல் உரிக்காத பூண்டை போட்டு சில நிமிடத்தில் சூடானதும் அடுப்பில் இருந்து இறக்கி, சூடு ஆறினதும் எண்ணையை இன்ரடு காலின் பெருவிரல் நகத்தில் மட்டும் பூசி விட வேண்டும்.

இரண்டு நிமிடங்கள் கழித்து உடனே காலை கழுவி விட வேண்டும், இதனை செய்யும் போதே உங்கள் உடம்பு குளிர்ச்சி அடைவதை உணர முடியும். 

இரண்டு நிமிடத்திற்கு மேல் இதனை விரலில் வைத்திருக்க கூடாது, சளி ஜுரம் உள்ளவர்கள் இதனை முயற்சி செய்ய வேண்டாம், மிகுந்த மன அழுத்தம் , உஷ்ண உடம்பு உள்ளவர்கள் இதனை கட்டாயம் செய்து பயன்பெறுங்கள். இதன் வாசனை தெய்வீக தன்மை கொண்டதாக இருக்கும்.

அந்த காலத்தில் சித்தர்கள், குழந்தை இல்லாத ஆண்கள் தங்களிடம் குழந்தை வேண்டும் என்று வந்தால் மேல் குறிப்பிட்ட மருத்துவ முறையையே சொல்வார்களாம். 

ஏனெனில் இதனை செய்வதன் மூலம் ஆண்களின் விந்து விருத்தி அடைந்து மூன்று மாதத்தில் குழந்தை பிறக்குமாம், இதனை தகவல் தொழில்நுட்ப் துறையில் வேலை செய்பவர்கள் தினமும் காலை குளிக்க போகும் முன் 1 நிமிடத்திற்கு எண்ணையை தடவினால் மன அழுத்தம் நீங்கும். மேலும் சிறியவர்களாக இருந்தால் வாரத்தில் இருமுறை இதனை செய்யலாம்.
Read More